TNPSC Thervupettagam

ஜாலியன் வாலாபாக் படுகொலை – ஏப்ரல் 13 

April 16 , 2020 1687 days 782 0
  • இந்திய அரசானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நினைவு தினத்தை அனுசரித்தது.
  • இது அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகின்றது.
  • 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று, (பைசாகி தினம்) பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் மக்களால் அமைதியான கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிராக அமைதியாகப் போராட மக்கள் அப்பூங்காவில் கூடினர்.
  • சத்யபால் மற்றும் சைய்ப்புதின் கிச்லு ஆகிய 2 தேசியத் தலைவர்களின் கைதை எதிர்த்தும் மக்கள் ஒன்று கூடினர்.
  • ஜெனரல் டயர் இந்தக் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்